Latestமலேசியா

Kanna Signature Unisex Hair Saloon: பிரிக்ஃபீல்ட்ஸுக்கு அழகுசேர்க்கும் புதிய முடிதிருத்தும் கடை

கோலாலாம்பூர், டிசம்பர் 15- பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதிக்கு மேலும் அழகுசேர்க்கும் வகையில் Kanna Signature Unisex Hair Saloon நவீன முடிதிருத்தும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

ஜாலான் ரக்யாட் சாலையில் அமைந்துள்ள அக்கிளைக் கடையை, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இன்று ரிப்பன் வெட்டி அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த முடிதிருத்தும் கடை ஆண்கள் – பெண்கள் என இரு பாலருக்கும் நவீன ஸ்டைல் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பை வழங்குவதாக, அதன் உரிமையாளர் கண்ணன் பழனிச்சாமி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

முதலில் பூச்சோங்கில் தொடங்கி, இப்போது பிரிக்ஃபீல்ட்ஸில் விரிவாக்கம் கண்டிருப்பதாக, நம்மவர்கள் மிக மிகக் குறைவாக காணப்படும் இந்த நவீன unisex hair saloon துறையில் 28 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் கண்ணன் கூறினார்.

கிளன் மேரி தோட்டத்தில் தனது தாத்தா காலத்தில் இந்த முடித்திருத்தும் வணிகம் தொடங்கிய தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இவ்வேளையில், இந்த நவீன முடிதிருத்தும் மற்றும் ஒப்பனை நிலையம், பெண்களுக்கும் சிறந்த சேவை வழங்கும் என டத்தோ ஸ்ரீ சரவணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்தியர்கள் அதிகம் கால் வைக்காத துறைகளில் இப்போது அதிகமான இந்திய இளைஞர்கள் தடம் பதிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் சொன்னார்.

சீனர்களை அதிகம் நம்பியிருந்த காலம் மாறியிருப்பதற்கு, இந்த Kanna Signature Unisex Hair Saloon முடிதிருத்தும் நிலையமே நல்ல சான்று என்றார் அவர்

மற்ற இனத்தார் ஆதிக்கம் செலுத்தும் வணிகங்களில் நம்மாலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது நமது கடமையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!