
கோலாலம்பூர், டிச 1 -முதல் 10 நிமிடங்களுக்கு கே.எல் .ஐ.ஏ விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்படாத சலுகை முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சாலையோரப் பகுதிகளில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தி கோலாலம்பூர் விமான நிலைய முனையத்தில் சீரான அணுகலை வழங்கும் வாகன அணுகல் மேலாண்மை அமைப்பு (VAMS) இன்று தொடங்குவதன் மூலம் இந்த சலுகையை பயணர்கள் பெறமுடியும். வாகனப் பயனர்களுக்கு 10 நிமிடங்களுக்கும் குறைவான காலத்திற்கு பயணிகளை இறக்கிவிட அல்லது ஏற்றிச் செல்ல VAMS இலவச கட்டணங்களை வழங்குகிறது. ஆனால் 10 நிமிடங்களுக்குப் பின் அபராதம் விதிக்கப்படும் என மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) வெளியிட்ட அறிக்கையில் தெரிவத்துள்ளது
10 நிமிடத்திலிருந்து 15 நிமிடத்திற்கு அபாரத கட்டனம் 10 ரிங்கிட் விதிக்கப்படும். 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடங்களுக்கு 30 ரிங்கிட்டும் 20 நிமிடத்திலிருந்து 25 நிமிடத்திற்கு 60 ரிங்கிட்டும் 25 நிமிடத்திலிருந்து 30 நிமிடங்களுக்கு 100 ரிங்கிட்டும் அபராதமாக விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனத்தின் நுழைவு நேரத்தை பதிவு செய்ய தானியங்கி உரிமத் தகடு பயன்படுத்தப்படுவதாக MAHB குறிப்பிட்டுள்ளது. பயணிகளை விரைவாக இறக்கிவிட அல்லது அழைத்துச் செல்ல 10 நிமிட சலுகை காலம் வழங்கப்படுகிறது. அந்த இடத்தில் உள்ள டிஜிட்டல் திரை 10 நிமிட வரம்பை மீறும் வாகனங்களின் பதிவு எண்ணைக் காண்பிக்கும். வெளியேறியதும், வாகனம் அந்தப் பகுதியில் இருந்த மொத்த நேரத்தை கணினி தானாகவே கணக்கிடுகிறது, மேலும் வரம்பை மீறும் வாகனங்களுக்கு அதிகபட்சமாக RM100 வரை அபராதம் விதிக்கப்படும்.



