
கோத்தா டாமான்சாரா, மார்ச்-23 – கோத்தா டாமான்சாராவில் உள்ள NSK பேரங்காடியினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து, அங்குள்ள நகைக்கடையிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் களவாடிச் சென்ற ஆடவன், வெறும் ஐந்தே மணி நேரங்களில் போலீஸிடம் சிக்கினான்.
அந்த உள்ளூர் ஆடவன் ரவாங், புக்கிட் பெருந்தோங்கில் நேற்றிரவு கைதானதை போலீஸ் உறுதிப்படுத்தியது.
7 தட்டுகளில் அவன் கொள்ளையிட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக நேற்று மாலை 5 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது கடையில் 3 பணியாளர்களும் 1 வாடிக்கையாளரும் இருந்தனர்.
முகமூடியும் hoodie சட்டையும் அணிந்திருந்த கொள்ளையன், திடீரென கைத்துப்பாக்கியை நீட்டியதால், கடையிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
துப்பாக்கி முனையில் அந்நால்வரையும் குனியச் சொல்லி, பின்னர் நகைகளோடு கொள்ளையன் தப்பியோடினான்.