செப்பாங், செப்டம்பர்-25, KLIA அனைத்துலக விமான நிலையத்தில் பிரமுகர்கள் வந்திறங்கும்-புறப்படும் பூங்கா ராயா வளாகமருகே, இன்று 5 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழத்திற்கு திடீர் பள்ளமேற்பட்டது.
அவ்வளாகத்திற்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பாதைகளுக்கு இடையில் உள்ள பகுதியில் அப்பள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பணித் துறை அமைச்சு கூறியது.
என்றாலும், அச்சாலையை அனைத்து வாகனங்களாலும் இன்னமும் பயன்படுத்த முடியும்.
சம்பவ இடத்தில் மட்டும் போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அமுலில் உள்ளது.
தவிர, சம்பந்தப்பட்ட மற்ற தரப்புகள் தொடர்ந்து தள கண்காணிப்பிலும் பரிசோதனையிலும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவ இடத்தருகே கசிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கழிவு நீர் குழாயை Malaysia Airports Holdings Bhd ( MAHB) தற்போது ஆய்வு செய்து வருகிறது.
ஒருவேளை, பள்ளமேற்பட்டதற்கு அதுதான் காரணமா என்பதும் தீர்மானிக்கப்படும்.
விசாரணை முடிந்ததும் MAHB விரிவான அறிக்கையை வெளியிடுமென அமைச்சு கூற்யியது.