
செப்பாங், ஆக 22 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் பதிவு செய்யப்படாத 85,000 ரிங்கிட் மதிப்புடைய மருந்துப் பொருட்களை கடத்தும் முயற்சியை AKPS எனப்படும் எல்லை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் நேற்று முறியடித்துள்ளது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் நான்கு பேக்குகளில் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை சந்தேகித்தபோது அந்த கடத்தல் முயற்சி கண்டுப்பிடிக்கப்பட்டதாக AKPS வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது .
மலேசிய சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்படாத 30 வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த 60,000 த்திற்கும் மேற்பட்ட யூனிட் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதை AKPS உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த பேக்குகள் மருந்து அமலாக்கத்துறைக் குழுவிடம் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டன . அண்டை நாட்டிலுள்ள கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக அந்த மருந்துகள் இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது.