
செப்பாங், ஆகஸ்ட்-13 – KLIA 1 விமான முனையத்தில் பிச்சையெடுத்து வந்ததாக நம்பப்படும் 3 வெளிநாட்டு ஆடவர்கள், நேற்றைய ‘Ulat KLIA’ சோதனை நடவடிக்கையில் கைதாகினர்.
அவர்களில் இருவர் அல்ஜீரிய நாட்டவர்கள், இன்னொருவர் ஈரானியர்.
சுற்றுலா விசாவில் வந்து, KLIA-வில் அவர்கள் பிச்சையெடுப்பது கண்டறியப்பட்டது.
மூவரும் மேல் விசாரணைக்காக சிலாங்கூர் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சுற்றுலா நுழைவைத் தவறாகப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, இந்நாட்டின் நற்பெயரைக் கெடுப்பதுடன் விமான நிலையத்தில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக AKPS அறிக்கையொன்றில் கூறியது.