கிள்ளான், செப்டம்பர்-2, தேசிய தினத்தன்று கிள்ளானிலிருந்து கோலாலம்பூர் செல்லும் வழியில் KTM ரயிலில் ரவுடி இளைஞர்களின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டார், 50 ஆண்டுகளாக மலேசியாவிலிருக்கும் ஆஸ்திரேலிய மூதாட்டி.
KTM ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் புகுந்த அக்கும்பலை 72 வயது அந்த முன்னாள் ஆசிரியை நல்ல விதமாக கடிந்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் சினமடைந்த அவ்விளைஞர்கள் “நாங்கள் மலேசியர்கள், இது எங்கள் நாடு, நீங்கள் பேச வேண்டாம்” என அடாவடியாக பேசியதோடு, அவரை வேண்டுமேன்றே வீடியோ எடுத்து கிண்டலடித்தனர்.
அதோடு நிற்காமல்,
அம்மூதாட்டியை சினமூட்டுவதற்காக, மேலும் சில ‘ரவுடி’ நண்பர்களை பெண்களுக்கான பெட்டிக்கு வரவழைத்து அட்டகாசம் செய்துள்ளனர்.
இதனால் தன் தாயும், அங்கிருந்த சில பெண் பயணிகளும் அச்சமடைந்ததாக, அந்த ஆஸ்திரேலிய மூதாட்டியின் மகள் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
மலேசியர்கள் என்பதற்காக எந்த எல்லைக்கும் போவீர்களா? வேற்று நிறத்தவரிடத்தில் இப்படித்தான் நடந்துக் கொள்வதா? என அவர் வேதனையுடன் கேட்டார்.
அது குறித்து KTM நிர்வாகத்திடம் அவர் புகாரும் செய்துள்ளார்.