
பேங்கோக், பிப்ரவரி-18 – தாய்லாந்தின் யசோதன் மாகாணத்தில் நடைபெற்ற சமய விழாவின் போது இராட்சத LED திரை சரிந்து விழுந்ததில், அந்நாட்டு உள்துறை துணை அமைச்சர் Sabida Thaiseth காயமடைந்தார்.
மேலுமிரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் காயமேற்பட்டது.
அரசாங்கத்துக்குச் சொந்தமான விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை பிற்பகல் வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
3,000 நடனமணிகளின் நடனத்தை முன் வரிசையில் அமர்ந்து பிரமுகர்கள் கண்டுகளித்துக் கொண்டிருந்த போது திடீரென சுழல் காற்று வீசியதில் LED திரை சரிந்து விழுந்தது.
அதில் Sabida காயமடைந்தாலும் நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து, பொது மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு மோசமான காயமேதுமில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு முதுகெலும்பு முறிந்தது; மற்றொருவருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.