
கோலாலம்பூர், ஜனவரி-27-ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலினம் மாறியவர்கள் உள்ளிட்டோரைக் குறிக்கும் LBGT சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில், 2022 முதல் 2025 வரை, நாட்டில் 135 பேர் கைதாகியுள்ளனர்.
அந்தந்த மாநில இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகளால் அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டது, பொது வெளியில் பெண்களைப் போல் உடையணிந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொண்டதாக, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் Zulkifli Hasan மக்களவையில் தெரிவித்தார்.
ஆனால் போதுமான ஆதாரம் இல்லாதவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டல், மறுவாழ்வு பயிற்சி வழங்கப்பட்டதாகவும், சிலர் புதிய வேலை அல்லது வணிக துறைகளில் ஈடுபட வழிகாட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கம், LGBT தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்களை திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
பொது மக்களும் இத்தகைய உள்ளடக்கங்களை மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், மலேசியாவில் LGBT சமூகத்தினரின் மொத்த எண்ணிக்கைக் குறித்த துல்லிமான விவரங்கள் தற்போதைக்கு அரசாங்கத்தின் வசமில்லை என்றார் அவர்.



