
மும்பை, நவம்பர்-2,
சவூதி அரேபியாவின் ஜெடா நகரிலிருந்து தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவின் ஹைதராபாத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன்
விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, மஹாராஷ்ட்ரா வான் பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, ஹைதராபாத்தில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தடைச் செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் IS பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக விமானத்தில் பயணிப்பதாகவும், 1984-ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலைப் போன்று ஹைதராபாத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விமானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு, விமானம் அவசர அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே என்பது தெரியவந்தது.
பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்டதும் விமானம் மீண்டும் ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.



