
சொங்லா, செப்டம்பர்-1 – தாய்லாந்தின் சொங்க்லா மாநிலத்தில், இரண்டு M16 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்களுடன் இருந்த 45 வயது மலேசியர் ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள் கைதுச் செய்துள்ளனர்.
நேற்று மாலை சாலைத் தடுப்புச் சோதனையில் அவர் கைதானார்.
அந்நபர் மலேசியப் பதிவு எண் கொண்ட காரில் பயணம் செய்ததாகவும், சந்தேகத்துக்கிடமான நடத்தை காரணமாக சாலையில் நிறுத்தப்பட்டதாகவும்
தாய்லாந்து பாதுகாப்பு பேச்சாளர் ஒருவர் கூறினார்.
வாகனத்தைச் சோதனை செய்தபோது துப்பாக்கிகளும் குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் ஏன் அந்த ஆயுதங்களை வைத்திருந்தார் என்பதைப் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது எல்லை தாண்டிய குற்றவியல் கும்பல்களுடன் தொடர்புடையதா என்பதையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.