Latestமலேசியா

MCMC & போலீஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்; மோசடி வலையில் சிக்கி 528,000 ரிங்கிட்டை இழந்த ஆசிரியை

குவாந்தான், செப்டம்பர்-19 – மலேசியத் தொடர்பு -பல்லூடக ஆணையம் (MCMC) மற்றும் போலீஸ் அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தோரின் வலையில் சிக்கி, பஹாங், ரவூப்பைச் சேர்ந்த ஆசிரியை சுமார் 528,000 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

51 வயது அந்த ஆசிரியையின் கைப்பேசி எண் குறித்து புகார் வந்திருப்பதாக, ஆகஸ்ட் 5-ம் தேதி MCMC அதிகாரி எனக் கூறிக் கொண்டவர் அழைத்து கூறியுள்ளார்.

சற்று நேரத்தில் போலீஸ் எனக் கூறிக் கொண்டவருக்கு தொடர்பு மாற்றப்பட்டது.

அந்நபரோ, அந்த ஆசிரியையிடம் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகவும், அவர் பணச்சலவையில் ஈடுபட்டுள்ளதாவும் கூறி அலற வைத்துள்ளார்.

நீதிமன்ற கைது ஆணையும் வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கின்றார்.

இதையடுத்து, சந்தேக நபர் கொடுத்த PIN எண்களில் debit அட்டையுடன் புதிய வங்கிக் கணக்கு திறக்குமாறும் அம்மாது கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

விசாரணைக்குத் தேவைப்படுவதாகக் கூறி, ஆகஸ்ட் 9 முதல் செப்டம்பர் 13 வரை மொத்த சேமிப்புப் பணத்தையும், நகைகளை விற்றுக் கிடைத்த ரொக்கத்தையும், அப்புதிய வங்கிக் கணக்கில் போடுமாறும் அவர் பணிக்கப்பட்டார்.

போதாக்குறைக்கு, தனிப்பட்ட கடனுக்கு (personal loan) விண்ணப்பித்து அதன் மூலம் கிடைத்த 250,000 ரிங்கிட் ரொக்கத்தையும் வங்கிக் கணக்கில் போடுமாறு அவர் பணிக்கப்பட்டுள்ளார்.

அனைத்தும் முடிந்ததும், தனது ATM அட்டையை சந்தேக நபர் கொடுத்த முகவரியில் வைக்குமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இத்தனை நடந்தும், கடைசி வரை தான் ஏமாற்றப்படுவதை அந்த ஆசிரியை உணராமலிருந்தது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!