
மாஸ்கோ , டிச 26 – 2014 ஆம் ஆண்டு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான MH370 ஐத் தேடும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான Ocean Infinity உறுதிப்படுத்தியுள்ளதாக ரஷ்யாவின் Sputnik Ria Novosti தெரிவித்துள்ளது.
மலேசிய அரசாங்கத்தின் ஆதரவோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக Ocean Infinity நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.
தேடும் பணியின் முக்கியத்துவத்தை கருதி அந்த நடவடிக்கையின் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ முன்னேற்றமும் மலேசியா அரசாங்கத்திடம் தெரிவிக்கப்படும். Ocean Infinity மேற்கு ஆஸ்திரேலியாவின் கடலுக்கு செல்லத் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
86 மீட்டர் நீளம் கொண்ட சிங்கப்பூரில் பதிவான அந்த கப்பல் Kwinana துறைமுகத்திலிருந்து டிசம்பர் 23 ஆம்தேதி புறப்பட்டதாகவும் தற்போது அக்கப்பல் இதற்கு முன் எம்.எச் விமானம் காணாமல் போனதாக கூறப்பட்ட இந்திய பெருங்கடலை நோக்கி தேடும் நடவடிக்கையில் ஈடுபடும்.
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களை ஏற்றிச் சென்ற MH370 விமானம் 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம்தேதி அதிகாலையில் காணாமல்போனது.



