Latestஉலகம்

MH370 விமானப் பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் RM1.68 மில்லியன் இழப்பீடு; மலேசிய ஏர்லைன்சிற்கு பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவு

பெய்ஜிங், டிச 8 – MH370 விமானத்தில் இருந்து காணாமல் போன பயணிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடாக மலேசிய ஏர்லைன்ஸ் ஒரு வழக்கிற்கு 2.9 மில்லியன் யுவான் அல்லது 410,240 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வழங்க வேண்டும் என்று பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என CCTV இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த 8 பயணிகள் சம்பந்தப்பட்ட எட்டு வழக்குகளுக்கான தீர்ப்புகளை இந்த உத்தரவு உட்படுத்தியுள்ளது. மேலும் 47 வழக்குகள் தீர்க்கப்பட்டு வழக்குகள் மீட்டுக்கொள்ளப்பட்டது . எஞ்சிய 23 வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துரைக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மலேசிய ஏர்லைன்ஸ் உடனடியாக பதிலளிக்கவில்லை. MH370 விமானம் காணாமல் போனது மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது. 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் 239 பேருடன் MH 370 விமானம் காணாமல் போனது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!