கோலாலம்பூர், நவம்பர்-18 – தலைநகர் MRR2 நெடுஞ்சாலையில் 5 டன் லாரி ஒன்று 11 கார்களையும் 1 மோட்டார் சைக்கிளையும் மோதிய விபத்தில், ஒரு பெண் உட்பட மூவர் சிராய்ப்புக் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
காயமடைந்த மூவரும் 43 முதல் 65 வயது வரையிலான உள்ளூர் மக்களாவர்.
சிகிச்சைக்காக மூவரும் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மாலை 4.30 மணி வாக்கில் மீட்புப் பணிகளும் துப்புரவுப் பணிகளும் நிறைவடைந்ததாக தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.