
கோலாலம்பூர், நவம்பர்-11 – My50 பயண அட்டைத்தாரர்கள் அடுத்தாண்டு முதல் அடையாட அட்டையைப் பயன்படுத்த வேண்யதில்லை.
அதற்கு பதிலாக Touch ‘n Go e-wallet சேவை உள்ளிட்ட மாற்று வழிகள் ஆராயப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறியுள்ளார்.
புதியக் கட்டண முறை ஒருங்கிணைக்கப்பட்டதும் பயனீட்டாளர்கள் Touch ‘n Go அடைகளையோ அல்லது QR குறியீடு வழியாக விவேகக் கைப்பேசிகளையோ பயன்படுத்தலாம்.
நாட்டின் பொது போக்குவரத்து முறையை டிஜிட்டல்மயமாக்குவதை அம்மாற்றம் நோக்கமாகக் கொண்டிப்பதாக அமைச்சர் சொன்னார்.
தவிர, My50 பயண அட்டையாக அடையாள அட்டைப் பயன்படுத்தப்படுவது பெரும்பாலோருக்கு வசதிப்படவில்லை.
ஒவ்வொரு முறையும் அடையாள அட்டையை scan செய்ய வெளியில் எடுக்க வேண்டியிருப்பதால், எங்கே அது காணாமல் போய் விடுமோ என்ற ஒரு வித கலக்கத்துடனேயே அவர்கள் பயணிக்கின்றனர் என்றார் அவர்.
My50 என்பது, கிள்ளான் பள்ளத்தாக்கில் மாதத்திற்கு வெறும் 50 ரிங்கிட் கட்டணத்தில் LRT, MRT, Monorail, BRT, Rapid KL பேருந்துகள், MRT feeder பேருந்துகள் ஆகியவற்றின் சேவைகளைக் கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்த வகைச் செய்யும் பயண அட்டையாகும்.