Latestமலேசியா

Peka B40 சுகாதார பராமரிப்பு திட்டத்தின் இலவச மருத்துவ பரிசோதனையில் 1.6 மில்லியன் மலேசியர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்

கோலாலம்பூர், ஆக – 28 – B40 தரப்பைச் சேர்ந்த 1.6 மில்லியன் மலேசியர்கள் மட்டுமே மே மாதம்வரை (Peka )சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தின் மூலம் இலவச சுகாதாரப் பரிசோதனைகளிலிருந்து பயனடைந்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், (STR) ரஹ்மா உதவித் திட்டத்தின் 6.9 மில்லியன் பெறுநர்களுக்கு விரிவான சுகாதாரப் பரிசோதனைகளை வழங்குகிறது.

மக்களிடையே தொடக்கக்கட்ட நோய் தடுப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இத்திட்டம் செயலாற்றி வருகிறது.

PeKa B40 இலவச அடிப்படை பரிசோதனைகளை வழங்குகிறது, இதில் உடல் பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மற்றும் ஒரு மருத்துவருடன் இரண்டு ஆலோசனை அமர்வுகள் ஆகியவை அடங்கும் என ProtectHealth Corporationனின் தர உறுதித் துறையின் தலைவர் டாக்டர் முகமட் அனிஸ் அப்துல் வஹாப்
(Dr Muhammed Anis Abd Wahab) தெரிவித்தார்.

குறைந்த பயன்பாட்டு விகிதம், தடுப்பு கலாச்சாரம், நேரக் கட்டுப்பாடுகள், அன்றாட வேலைக்கு அளிக்கப்படும் முன்னுரிமை, சிகிச்சை செலவுகள் குறித்த கவலைகள் மற்றும் ‘நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிவதை விட தெரியாமல் இருப்பது நல்லது’ என்ற கருத்து இன்னும் பெரும்பாலான மலேசியர்களால், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தரப்பினரிடம் இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!