
புத்ராஜெயா – ஆகஸ்ட் 8 – முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசுபடாமல் சுத்திகரிப்பு பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், மின்சார குப்பை லாரிகள் விரைவில் ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் அலோர் உள்ளிட்ட கோலாலம்பூரின் முக்கிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு அமைச்சர் டத்தோ ஸ்ரி ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
13வது மலேசியா திட்டத்தின் (13MP) கீழ், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகத்தின் (SWCorp)சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
2026ஆம் ஆண்டு மலேசியா வருகை ஆண்டை முன்னிட்டு, சுற்றுலாப் பகுதிகளில் சுத்தம் மற்றும் ஒழுங்கு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது
இதனுடன் இணைந்து, மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுவது கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாகும் என்றும், இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுடன், அதிக சத்தம் இல்லாத பணிச்சூழலை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.