
சபாக் பெர்னாம், செப்டம்பர் 17 – சபாக் பெர்னாம், தாமான் பெர்தாமவில் (Taman Pertama), Proton Saga BLM கறுப்பு நிற வாகனத்தில் காவலாளி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்தின் பொனட்டிலிருந்து இறந்த நிலையில் அந்த ஆடவரை போலீசார் கண்டெடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அந்த காவலாளி அங்குச் சுற்றுவட்டாரத்தில் பணிபுரியும் 43 வயதுடைய ஆடவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் மரண இடத்தில் குற்றவியல் தடயங்கள் இருப்பதையும் சிலாங்கூர் காவல் படைத் தலைமையகத்தின் தடயவியல் பரிசோதனை அதிகாரிகள் கண்டறிந்திருக்கின்றனர்.
கொலைக் குற்றமான தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளதாக சபாக் பெர்னாம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் ராபின் குஹா தாகுர்தா (Robin Guha Thakurta) தெரிவித்தார்.