
கோலாலம்பூர், செப்டம்பர்-9 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில்
சாப்ரி யாக்கோப் மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முஹமட் அனுவார் முஹமட் யூனுஸிடமிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC 169 மில்லியன் ரிங்கிட் பணத்தை பறிமுதல் செய்த வழக்கில் இருவரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று இது தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மூன்றாம் தரப்புக்கான அறிவிப்பை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது அக்டோபர் 1-ல் விசாரணை நடைபெறும்; அன்றைய தினத்திற்குள் பணத்திற்கு உரிமைக் கேட்டு யாரும் முன்வரவில்லை என்றால் அது அரசுடைமையாகி விடும் என நீதிமன்றம் அறிவித்தது.
பல நாணயங்களில் இருந்த இந்த பணமும், சுமார் RM7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளும் ஊழல் மற்றும் பணமோசடி விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்டவை யாகும்
2021 முதல் ஓராண்டுக்கு இஸ்மாயில் சாப்ரி பிரதமராக இருந்த போது நடந்த சம்பவங்கள் தொடர்பில் அவர் பல முறை MACC-யால் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.