
புத்ராஜெயா, செப்டம்பர் 1 – அத்தியாவசியப் பொருட்களை வாங்க MyKad வாயிலாக வழங்கப்பட்ட 100 ரிங்கிட்டைப் பயன்படுத்துவதில், நேற்று முதல் நாளிலேயே பொது மக்கள் பிரச்னையை சந்திக்க நேர்ந்ததற்கு, நிதியமைச்சும் MyKasih-வும் மன்னிப்புக் கோரியுள்ளன.
ஒரே சமயத்தில் எக்கச்சக்கமானோர் அதனைப் பயன்படுத்த முயன்றதால் MyKasih கணினி முறையில் கோளாறு ஏற்பட்டதாக அமைச்சு விளக்கியது.
அதனை சரிசெய்யும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீக்கிரமே அனைத்தும் வழக்க நிலைக்குத் திரும்பும் என அமைச்சு உறுதியளித்தது.
தற்போதைக்கு மக்களால் தொடர்ந்து பொருட்களை வாங்க முடியும், ஆனால் சில கடைகளில் அளவுக்கதகமான MyKasih கணினி முறை பயன்பாட்டால் பிரச்சை ஏற்படலாம் என அது கூறிற்று.
தேசிய தினத்தை ஒட்டி மலேசியர்களுக்கு சிறப்பு அங்கீரமாக பிரதமர் கடந்த மாதம் இந்த 100 ரிங்கிட் உதவியை அறிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 31 தொடங்கி அதனைப் பயன்படுத்தலாம் என அவர் கூறியிருந்த நிலையில், நேற்று மக்கள் அதில் ஆர்வம் காட்டினர்.
ஆனால், பல இடங்களில் MyKasih கணினி முறையில் ஏற்பட்ட கோளாறால் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க முடியாமல் தள்ளு வண்டிகளாலேயே வைத்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவங்கள் முன்னதாக வைரலாகின.