Latestமலேசியா

RM2.4 மில்லியன் ஷாபு கடத்தல் முயற்சி முறியடிப்பு; ஆடவன் தடுத்து வைப்பு

அலோர் ஸ்டார், டிச 23 – பெர்லீசிலிருந்து பினாங்கிற்கு 2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய ஷாபு போதைப் பொருளை எடுத்துக் சென்ற ஆடவனின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதன் தொடர்பில் Hutan Kampung டோல் சாவடியில் இன்று விடியற்காலையில் 48 வயதுடைய சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டான்.

மெக்கனிக்காக வேலை செய்து வந்த அந்த ஆடவனை கெடா குற்றப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் கைது செய்தனர்.

இன்று விடியற்காலை 5 மணியளவில் Ford Ranger வாகனத்தில் தப்பியோட முயன்றபோது அந்த சந்தேகப் பேர்வழி பிடிபட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா ( Adzli Abu Sha ) தெரிவித்தார்.

கெடா குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையகத்ததின் குற்றப்புலனாய்வுத்துறையின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அந்த நபர் கைது செய்யப்பட்டான்.

அந்த Ford Ranger வாகனம் டோல் சவாடியில் ஒரு தடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டபோதிலும் அதன் ஓட்டுனர் வாகனத்திலிருந்து வெளியேற மறுத்ததால் போலீஸ் குழுவினர் அந்த வாகனத்தின் கண்ணாடியை கட்டாயமாக உடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த வாகனத்தின் போனட் பகுதியில் நான்கு வெள்ளை சாக்குப் பைகளில் 2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு பவுடர் வகையைக் கொண்ட போதைப் பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அந்த வாகனத்தின் பின்னால் பயணிகள் அமரும் இடத்திலிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பினாங்கில் போதைப் பொருளை ஒப்படைப்பதற்காக அந்த சந்தேகப் பேர்வழிக்கு 15,000 ரிங்கிட் கொடுக்கப்பட்ட தகவலையும் Adzli செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!