
சபா, ஜூலை 23 – மாநில அரசின் (PBT) பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்ததாரர்களிடமிருந்து சுமார் 200,000 ரிங்கிட் லஞ்சம் பணத்தை பெற்ற பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாநில அரசின் முன்னாள் ஊழியர்கள் உட்பட ஐந்து நபர்களை சபா ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.
30 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய ஐந்து சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் இன்று தொடங்கி அடுத்த ஏழு நாட்கள் வரை தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 2022ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தங்களின் பதவிக்காலத்தின்போது பல ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சபா MACC இயக்குனர் டத்தோ எஸ். கருணாநிதியைத் தொடர்பு கொண்டபோது, ஐந்து சந்தேக நபர்களின் கைது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் இவ்வழக்கு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.