ரந்தாவ் பஞ்சாங், டிச 13 – 4 .5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான
15,000 கடத்தப்பட்ட அலங்கார செடிகளுடன் லோரி ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ரந்தாவ் பஞ்சாங், Kampung Limau Purut டைக் கடந்து அந்த லோரி சென்று கொண்டிருந்தபோது, பொது நடவடிக்கைப் படையின் போலீசார் இரவு 7 மணியளவில் அதனை தடுத்து நிறுத்தினர்.. அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு வகையான 15,000 அலங்கார செடிகள் இருப்பதைக் கண்டவுடன் 53 வயது லோரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாக தென்கிழக்கு பொது நடவடிக்கை பிரிவின் காமண்டர் டத்தோ நிக் ரோஸ் அஸ்ஸான் ( Nik Ros Azhan ) தெரிவித்தார்.
மற்றொரு நடவபடிக்கையில் நேற்று ஜெராம் பெர்டாவில் 6,000 மதிப்புள்ள தாய்லாந்து நொறுக்கு தீனி பொருட்களுடன் உள்நாட்டு ஆடவரும் தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டனர். 35 மற்றும் 37 வயதுடைய அந்த இருவரும் பயணம் செய்த காரில் அந்த பொருட்கள் இருந்ததைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நொறுக்குத் தீன உணவுப் பொருட்கள் ரந்தாவ் பஞ்சாங்கிலுள்ள சில கடை உரி மையாளர்களுக்கு விற்பதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக நிக் ரோஸ் கூறினார்.