Latestமலேசியா

RM60,000 போலி பணக் கோரிக்கை; ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் MACCஆல் கைது

கோத்தா கினபாலு, மார்ச் 10 – நான்கு ஆண்டுகளுக்கு முன் அமலாக்க நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் மொத்தம் 60,000 ரிங்கிட் மதிப்புள்ள போலி பணக் கோரிக்கையை பெற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை மணி 9.45 அளவில் Keningauவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வந்தபோது 62 வயதுடைய அந்த அந்த நபர் கைது செய்யப்பட்டதாக MACC க்கு அணுக்கமான தகவல்கள் கூறின.

2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்வரை செய்யப்பட்டதாக கூறப்படும் போலி பணக் கோரிக்கைகள் மீதான விசாரணைகளின் விளைவாக இந்த கைது நடவடிக்கை நடந்ததாக கூறப்பட்டது.

சபாவில் உள்ள ஒரு அமலாக்க நிறுவனத்திடம் சந்தேக நபர் சமர்ப்பித்த தவறான ஆவணங்கள் மூலம் இந்தக் கூற்றுக்கள் கூறப்பட்டதாக MACC வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனை சபா எம் ஏ.சி.சி. யின் இயக்குனர் டத்தோ எஸ். கருணாநிதியுடன் ( Datuk S. Karunanithy) தொடர்பு கொண்டபோது அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும் இந்த வழக்கு எம்.ஏ.சி.சி 2009ஆம் ஆண்டுச் சட்டத்தின் இன் பிரிவு 18 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சந்தேக நபர் மீது இம்மாதம் மார்ச் 14 ஆம்தேதி கோத்தா கினபாலு சிறப்பு ஊழல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கருணாநிதி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!