
பாடாங் பெசார், ஜூலை-22- தாய்லாந்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் 23 கிலோ கிராம் கஞ்சா செடிகள், மலேசிய-தாய்லாந்து எல்லையான பாடாங் பெசாரில் பறிமுதல் செய்யப்பட்டன.
CCTV கேமரா பதிவைக் கண்காணித்ததில், 690,000 ரிங்கிட் மதிப்பிலான அந்த கஞ்சா செடிகள் சிக்கியதாக, பொது நடவடிக்கைப் படையின் வடப் பகுதி கமாண்டர் ஷாரும் ஹஷிம் (Shahrum Hashim) தெரிவித்தார்.
சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்ட அச்செடிகள், பாடாங் பெசார் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த கஞ்சா செடி கடத்தல், 1952-ஆம் ஆண்டு அபாய போதைப் பொருட்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.