Latestஉலகம்

ChatGPT ஊக்குவிப்பால் இளைஞர் தற்கொலை வழக்கு; கட்டுப்பாடுகள் விதித்த நிறுவனம்

பாரிஸ், செப்டம்பர் 3 – அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI தனது பிரபல ChatGPT-யில் பெற்றோர்கள் செயல்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம், தங்கள் மகன் ChatGPT ஊக்குவிப்பால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய அமெரிக்க தம்பதியினர் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.

அடுத்த ஒரு மாதத்திற்குள் பெற்றோர்கள் தங்கள் கணக்குகளை பிள்ளைகளின் கணக்குகளுடன் இணைத்து, வயதுக்கேற்ற நடத்தை விதிகளை அமைத்துக் கொள்ள முடியும்.

மேலும், இளைஞர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதை கண்டறிந்தால் பெற்றோருக்கு உடனடி அறிவிப்புகள் அனுப்பப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டது.

பயனர்களின் மனஅழுத்தம் மற்றும் உணர்ச்சி சிக்கல்களை அடையாளம் கண்டு பதிலளிக்கும் திறனை மேம்படுத்தி வருவதோடு அடுத்த மூன்று மாதங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!