
கோலாலம்பூர், அக்டோபர்-8,
அரசாங்கம் அறிமுகப்படுத்திய SKPS எனும் பெட்ரோல் மானியக் கட்டுப்பாட்டு முறை குறித்து இன்னும் பலர் குழப்பத்தில் உள்ளனர்.
உண்மையில், 21 வகையான வர்த்தக வாகனங்கள் இந்த மானிய விலையிலான பெட்ரோலைப் பெறத் தகுதியானவை என, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது.
பொது நிலப் போக்குவரத்து துறையில் – டேக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து, சிறியப் பேருந்து, அமரர் ஊர்தி, shuttle பேருந்து, அம்புலன்ஸ் வண்டி, தீயணைப்பு வாகனம், நின்று நின்று செல்லும் பேருந்துகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
அதே போல் சரக்கு போக்குவரத்து துறையில் – சரக்கு லாரி, பேனல் வேன், லூட்டன் லாரி, கேட்டரிங் உணவு விநியோக லாரி, குளிர்பதன லாரி, விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி, நடமாடும் சேவை லாரி உள்ளிட்ட 12 வகையான வாகனங்கள் தகுதிப் பட்டியலில் உள்ளன.
செப்டம்பர் 15 முதல் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை முழுக்க முழுக்க இணையம் வாயிலாக மட்டுமே செய்யப்பட வேண்டும்…அதாவது mysubsidi.kpdn.gov.my என்ற அதிகாரப்பூர்வ தளத்தில்.
மானிய விலையிலான RON95 பெட்ரோலுக்கான இந்தத் தகுதிப் பட்டியல் அரசாங்கத்தின் முடிவுகளுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றப்படலாம் எனவும் KPDN கூறியது.
இந்த SKPS முறையின் நோக்கமே…பெட்ரோல் மானியச் சலுகை உண்மையிலேயே தகுதிப் பெற்ற வர்த்தக வாகனங்களுக்கே வழங்கப்படுவதை உறுதிச் செய்வதாகும் என அமைச்சு கூறிற்று.