Latestமலேசியா

நீதிபதி வீட்டில் அத்துமீறி நுழைந்து கொள்ளை – இருவருக்கு 38 மாதம் சிறை

பத்து பஹாட், ஜன 3 – பத்து பஹாட் மாவட்டத்தின் ஷரியா நீதிபதி வீட்டில் அத்து மீறி நுழைந்தது , மற்றும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றங்களுக்காக இரு ஆடவர்களுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 38 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்களை 38 வயதுடைய மற்றும் 37 வயதுடைய அந்த இரண்டு நபர்களும் ஒப்புக் கொண்டனர். எனினும் மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த ஆடவர் ஜொகூர் பாரு பெர்மாய் மருத்துவமனையில் மனநோய் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை ஏற்றுக்கொண்டு குற்றவியல் சட்டத்தின் 342 ஆவது விதியின் கீழ் தண்டனையை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளாரா என்பது அவருக்கான மருத்துவ சிகிச்சையில் உறுதிப்படுத்தப்படும். இதனிடேயே தண்டனைச் சட்டத்தின் 411 ஆவது விதி மற்றும் 314ஆவது விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட இரு குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட நபருக்கு 38ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 58 வயது பெண்மணிக்கு சொந்தமான ஒரு ஜோடி தங்கக் காப்புகளை இரண்டு அடகுக்கடையில் வைத்த குற்றச்சாட்டையும் அந்த இரு நபர்களும் ஒப்புக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!