
சுங்கை பட்டாணி, அக்டோபர்-28, வரும் ஜனவரியில் தொடங்கும் PLKN எனப்படும் தேசிய சேவைப் பயிற்சியில், SPM முடித்த மாணவர்கள் மட்டுமே பங்கேற்பர்.
தற்காப்புத் துறை துணையமைச்சர் அட்லி ச’ஹாரி (Adly Zahari) அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
SPM முடித்தவர்களால் உடனடியாக முடியாவிட்டாலும், அப்பயிற்சியில் பங்கேற்க 35 வயது வரையில் அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது.
எனவே வயது வரம்பு குறித்து யாரும் வீண் கவலையடைய வேண்டாமென அட்லி கேட்டுக் கொண்டார்.
ஜனவரியில் 2 PLKN முகாம்களில் 1,000 பேர் பயிற்சியைத் தொடங்குவர் என்றார் அவர்.
பயிற்சித் திட்டங்களில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பயிற்சி முடிந்து வெளிவரும் போது தங்களுக்கென தனித்துவ அடையாளத்தைக் கொண்டிருப்பதுடன், தத்தம் துறைகளில் சாதிக்கும் ஆற்றலை அவர்கள் பெற்றிருப்பர் என துணையமைச்சர் சொன்னார்.