
ஜோகூர் பாரு, ஜன 17 – உலுத் திராம் Kamapung oren னில் உள்ள வீடு ஒன்றில் இன்று நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர். அதிகாலை மணி 2.46க்கு நிகழ்ந்த அந்த விபத்தில் நால்வர் சிக்கிக்கொண்ட போதிலும் 13 வயது சிறுவனை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமான மீட்டனர். பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் நான்கு தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 24 தீயைணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாக தீயணைப்புத்துறையின் முதிர்நிலை கமாண்டர் முகமட் பைஸ் ரம்லி ( Mohd Faiz Ramli ) தெரிவித்தார்.
அவர்கள் அங்கு சென்றடைந்தபோது அந்த வீடு 80 விழுக்காடு தீயில் அழிந்துவிட்டதோடு அவ்வீட்டில் நால்வர் சிக்கிக்கொண்டிருப்பது தெரியவந்தது. உடல் முழுவதிலும் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான பெரியவர்களில் ஒரு ஆடவரும் ஒரு பெண்ணும் மற்றும் ஒரு சிறுமியும் இறந்தனர். காப்பற்றப்பட்ட சிறுவனுக்கு முகம் மற்றும் கைகளில் தீக்காயம் இருந்ததால் முதலுதவி வழங்கப்பட்ட பின் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக முகமட் பைஸ் ரம்லி வெளியிட்ட அறிககையில் தெரிவித்தார்.