Latestமலேசியா

STR முதற்கட்ட அரசாங்க உதவித் தொகை நாளை முதல் விநியோகிப்பு

கோலாலம்பூர், ஜன 21 -STR எனப்படும் ரொக்க உதவிக்கான முதற்கட்ட தொகை பதிவுசெய்யப்பட்ட ஒன்பது மில்லியன் பயனாளிகளுக்கு நாளை முதல் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும். இந்த உதவித் தொகை பெறுபவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது அந்தந்த STR தகுதி வகைகளுக்கு Bank Simpanan Nasional (BSN) வங்கி மூலம் பணமாக செலுத்தப்படும். கடந்த வாரம் முதல் வழங்கப்பட்ட Sumbangan Asas Rahma மற்றும் STR உதவித் தொகையில் மக்கள் தொகையில் பெரியோர்களில் 60 விழுக்காட்டினர் அல்லது கிட்டத்தட்ட 90 மில்லின் பேர் நன்மை அடைவார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு 3,700 ரிங்கிட்டாக ஆக இருந்த குடும்பங்களுக்கான கூடியபட்ச கட்டணத்தை 25 விழுக்காடு அதிகரித்து 4,600 ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் கூறினார். திருமணம் ஆகாதவர்களுக்கான குறைந்தபட்ச ரொக்க உதவித் தொகை கடந்த ஆண்டு 500 ரிங்கிட்டாக இருந்து இவ்வாண்டு 600 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதால் இது 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2024 -இல் ஒதுக்கப்பட்ட 2.1 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை STR -க்காகப் பயன்படுத்தப்பட்ட ஒதுக்கீடு 2.3 பில்லியன் ரிங்கிட்டாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!