Latestமலேசியா

மூலிகை உணவுகளுடன் வைத்தியர்களை கெளரவித்த விழா; மலேசிய இந்திய பாரம்பரிய மருத்துவக் கழகம்

கோலாலம்பூர், மார்ச் 29 – கடந்த மார்ச் 23ஆம் திகதி, மலேசிய சுகாதார அமைச்சின் T&CM கீழ் ஒரு குடையாக இயங்கி வரும் மலேசியா இந்திய பாரம்பரிய மருத்துவக் கழகமான PEPTIM, வைத்தியர்களைப் போற்றும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடுச் செய்திருந்தது.

இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில், கலந்து கொண்ட அனைத்து வைத்தியர்களுக்கு சந்தன மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டதோடு அனைத்து விருந்தினர்களுக்கும் மூலிகை உணவுகள் வழங்கப்பட்டதாக PEPTIM கழகத்தின் தலைவர் வைத்தியர் சிவகுமரன் தெரிவித்தார்.

இந்திய தூதரகக் கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வடக்கு முதல் தெற்கு வரை உள்ள மாநிலங்களிலிருந்து ஏறக்குறைய 120 சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

அரசங்கத்தில் முழுமையாகப் பதிவு செய்த வைத்தியர்களுக்கு PEPTIM, ID CARD எனும் மருத்துவ அடையாள அட்டையை வழங்கியது இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.
இதன் வழி மருத்துவதிற்கு வாங்கும் மருந்துகளிலும் மூலிகை பொருட்களிலும் இவர்கள் கழிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதனிடையே, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் அமையப் பெற்ற இந்த விழாவில், இன்னும் பதிவு பெறாத சித்த மற்றும் ஆய்வோத மருத்துவர்கள் PEPTIM கழகத்தின் சித்த வைத்திய பிரிவின் பொறுப்பாளர் வைத்தியர் அகஸ்தியரதியைத் தொடர்பு கொண்டு பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!