
கிள்ளான், ஜனவரி-8 – கிள்ளான், தாமான் வங்சாவில், 43 வயது ஆடவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேற்று நள்ளிரவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சந்தேக நபர்கள் 2 முறை துப்பாக்கியால் சுட்டதில், மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே அவ்வாடவர் உயிரிழந்தார்.
கொலையாளிகள் தப்பியோடினர்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க, CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.



