Latestஉலகம்

அமெரிக்காவில் மனைவி உள்ளிட்ட மூவரை சுட்டுக் கொன்ற இளைஞன் பெரும் போராட்டத்திற்குப் பிறகு சரண்

அமெரிக்கா, மார்ச் 17 – அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மூவரை சுட்டுக் கொன்ற படு பயங்கரமான ஆடவன், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு போலீசிடம் சரணடைந்தான்.

வீடற்றவன் என நம்பப்படும் Andre Gordon எனும் 26 வயது அவ்விளைஞன், காலையிலேயே தனது ஆவேசத் தாக்குதலைத் தொடங்கி விட்டான்.

காரொன்றை மோதித் தள்ளி, அங்கிருந்து 65 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடத்திற்குச் சென்று 52 வயது சிற்றன்னை மற்றும் 13 வயது தங்கை என அங்கு இருவரை அவன் கொலைச் செய்தான்.

அப்போது வீட்டில் இருந்த சிறுவன் உள்ளிட்ட ஏனைய மூவர் அவனது கண்களில் படாதவாறு ஒளிந்துக் கொண்டதால், உயிர் தப்பினர்.

அம்முவரும் தேடி கிடைக்காத ஆத்திரத்தில், அங்கிருந்து காரில் கிளம்பியவன், அருகில் வீட்டொன்றை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த 25 வயதுப் பெண்ணைச் சுட்டுக் கொன்றான்.

அப்பெண், இரு பிள்ளைகளுக்குத் தாயான Gordon-னின் மனைவி என தெரிய வருகிறது.

கடைசியாக தனது தாயையும் அவன் விட்டு வைக்கவில்லை; எனினும், அவனின் துப்பாக்கிச் சூடு பட்டதில் தெய்வாதீனமாக தப்பிய தாய் காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார்.

அங்கிருந்து இன்னொரு ஹோண்டா காரை திருடிக் கொண்டு கிளம்பி, பக்கத்து மாநிலமான நியூ ஜெர்சியில் ஒரு வீட்டுக்குள்ளே சென்று தன்னை தானே Gordon அடைத்துக் கொண்டான்.

போலீஸ் மணிக்கணக்கில் பேச்சு கொடுத்து, அவனைச் சமாதனம் செய்ய, ஒருவழியாக ஆவேசம் அடங்கி Gordon போலீசில் சரணடைந்தான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!