Latestமலேசியா

மடானி மருத்துவ திட்டத்தின் கீழ் 1மில்லியன் பேர் இலவச சிகிச்சை பெற்றனர்

கோலாலம்பூர், டிச 15 – அரசாங்கத்தின்  மடானி  மருத்துவ  திட்டம்   ஜூன் 15ஆம்  தேதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம்  பதிவுசெய்யப்பட்ட    தனியார் கிளினிக்குகளில் சிறு  சிறு  நோய்களுக்காக  1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இலவச சிகிச்சையை  பெற்றுள்ளனர்.   2,506  தனியார் கிளினிக்குகளில்  62.5 மில்லியன்  ரிங்கிட் செலவில் 785, 623 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமட்  தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு  திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்கு  100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதன் மூலம்  அடுத்த ஆண்டிலும்  இத்திட்டத்தை தொடர்வதற்கான  கடப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதாக  அவர்  கூறினார். 

குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் தரமான சுகாதார நலன்களுக்கான   சேவைகள் கிடைப்பதை  அனுமதிக்கும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள தனியார் கிளினிக்குகள்  இத்திட்டத்தில் தொடர்ந்து  இடம்பெறுவதற்கு  சுகாதார அமைச்சு  நடவடிக்கையை எடுத்துவரும் என  சுல்கிப்லி அகமட்  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!