Latestமலேசியா

USM மாணவர்களின் “Reboot” நிகழ்ச்சியின் நிறைவு விழா

பினாங்கு, பிப் 2 – தகவல் தொடர்பு விழிப்புணர்வு, மனச்சோர்வு ஆகியவை முன்வைத்து USM இறுதியாண்டு மாணவர்களால் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த “Reboot” எனும் நிகழ்ச்சியின் நிறைவு விழா கடந்த 26ஆம் திகதி ஜனவரி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிறைவு விழாவில் முடிந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ‘Redefining Beauty Standards’ எனும் காணொளி தயாரிக்கும் போட்டி மற்றும் ‘Unveiling Fear of Missing Out’ எனும் பதாகை தயாரிக்கும் போட்டியில் கலந்து கொண்ட 35 இடைநிலைப்பள்ளி, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், அதிர்ஷ்ட குலுக்கலின் பரிசுகள் வழங்கும் அங்கமும் நடைபெற்றது. வழங்கப்பட்ட பரிசுகளில் 16 ‘Touch n Go’ அட்டைகள், “Bertam Souk” மற்றும் “Water Park”, பினாங்கிற்கான இரண்டு விடுமுறை டிக்கெட்டுகள் மற்றும் ஒரு “buffet” இரவு உணவிற்கான பரிசுகளும் அடங்கும்.

இந்த நிறைவு விழாவின் போது நடத்தப்பட்ட சுவாரஸ்யமான அங்கங்களில் டிஜிட்டல் மனச்சோர்வு விவாத அங்கமும் ஒன்றாகும். அதனை தொடர்ந்து, ஜாஸ் இசைக்குழுவின் இரண்டு பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளும் அந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது.

டிஜிட்டல் மனச்சோர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி ஒரு சிறிய பங்களிப்பாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!