
பத்து பஹாட், நவம்பர் 25-ஜோகூர், பத்து பஹாட்டில் இன்று காலை நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் சுமார் 100 கிலோ எடையுள்ள longshaft இரும்புக் கம்பி, 63 வயது ஆடவரின் உயிரைப் பறித்தது.
செகாமாட் செல்லும் வழியில் Sri Gading அருகே, Jalan Sri Bengkal-லில் Juhari Murid ஓட்டிச் சென்ற Perodua Alza காரின் முன் பக்கக் கண்ணாடியை, பக்கத்தில் சென்ற லாரியிலிருந்து கழன்றிய அந்த இரும்பு புடைத்துகொண்டு விழுந்ததில், அது முகத்தில் பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அவரது மனைவியும், காரோட்டி உள்ளிட்ட அவரின் 3 இளைய உடன்பிறப்புகளும் காயமின்றி உயிர் தப்பினர்.
உயிரிழந்தவரின் உடல் சவப்பரிசோதனைக்காக பத்து பஹாட், சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
விபத்து தொடர்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.



