
செப்பாங், ஜூலை 2 – Seatbelt எனப்படும் இருக்கைகளுக்கான பாதுகாப்பு belt, பஸ்களில் அணிந்திருப்பது மற்றும் அது தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த சிலாங்கூர் JPJ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார்கள்.
இதற்காக விரைவு பஸ்கள் மற்றும் சுற்றுலா பஸ்களில் ரகசியப் பணியாளர்களை சிலாங்கூர் JPJ பணியில் அமர்த்தும் .
பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்புத் தரத்தை வலுப்படுத்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கிய நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக JPJ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுவார்கள் என சிலாங்கூர் சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குனர் Azrin Borhan தெரிவித்தார்.
பஸ் பயணங்கள் முழுமையடையும்வரை பயணிகள் இருக்கைகளில் பாதுகாப்பு belt விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த பயணிகள் போல் மாறுவேடமிட்டு JPJ அதிகாரிகள் முழு பஸ் பயணத்தின்போதும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
அதோடு பஸ் முனையங்கள், ஓய்வு பெரும் இடங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் சோதனை நடவடிக்கை கூடுதலாக இருக்கும் என Dengkil ஓய்வு நிறுத்தத்தில் நடந்த அமலாக்க நடவடிக்கையின்போது செய்தியாளர்களிடம் Azrin Borhan கூறினார்.
1978 ஆம் ஆண்டின் வாகனங்கள் பாதுகாப்பு இருக்கைகள் seatbelt சட்டத்தின் கீழ் இந்த கட்டாய விதிமுறைகளை பின்பற்றத் தவறும் பயணிகளுக்கு 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு 4,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது 12 மாதங்கள்வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.