டிரம்ப் மீதான குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய பல அதிகாரிகளை அமெரிக்க நீதித்துறை நீக்கியது

வாஷிங்டன், ஜன 28 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீதான குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய பல அதிகாரிகளை அமெரிக்க நீதித்துறை நேற்று நீக்கியது.
அதிபருக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கின் காரணமாக, அவரது நிகழ்ச்சி நிரலை உண்மையாக செயல்படுத்த இந்த அதிகாரிகள் நம்ப முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சட்டத்துறையின் இடைக்கால தலைவர் ஜேம்ஸ் மெக்ஹென்ரி ( James McHenry ) இந்த முடிவை எடுத்தார் என்று நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்களில் எத்தனைபேர் இப்போது வேலையிலிருந்து நீக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரி குறிப்பிடவில்லை. ஆனால் 12க்கும் மேற்பட்டோர் இந்த பட்டியலில் அடங்குவர் என அமெரிக்க நீதித்துறையும் அமெரிக்க ஊடகங்களும் தெரிவித்தன. இவர்களில் நீதித்துறையில் உள்ள தொழில் வழக்கறிஞர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்பிற்கு எதிராக இரண்டு கூட்டரசு வழக்குகளை தாக்கல் செய்த சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், இம்மாத தொடக்கத்தில் ராஜினாமா செய்தார்.
2020 தேர்தல் முடிவுகளை முறியடிக்க சதி செய்ததாகவும், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின் ரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாகவும் டிரம்ப் மீது ஸ்மித் (Jack Smith) குற்றச்சாட்டை கொண்டு வந்தார்.
எந்த ஒரு வழக்கும் விசாரணைக்கு வரவில்லை மற்றும் ஸ்மித் பதவியில் இருக்கும் அதிபருக்கு எதிராக வழக்குத் தொடரக்கூடாது என்ற நீண்டகால நீதித்துறை கொள்கைக்கு இணங்க நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் அந்த இருவரையும் குடியரசு கட்சி நீக்கியது.