Latestமலேசியா

சரவாக் வெள்ளம்; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,000 தாண்டியது

கூச்சிங், பிப்ரவரி-1 – சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை 7 மணி வரைக்குமான தகவலின் படி, 3,618 குடும்பங்களைச் சேர்ந்த 12,470 பேர் 62 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

நேற்றிரவு அவ்வெண்ணிக்கை 11,234 பேராக மட்டுமே இருந்தது.

புதிதாக 2 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஆக மோசமாக பிந்துலு வட்டாரம் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு 10 PPS மையங்கள் செயல்பட்டு வருகின்றன; 9 மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரும், மற்றொன்றில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள 2 மாவட்டங்களில் மொத்தமாக 1,649 குடும்பங்களைச் சேர்ந்த 5,885 பேர் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

சிபு, கூச்சிங், சமரஹான், ஆசாஜயா, செபுயா, செரியான் உள்ளிட்ட இடங்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில் சபாவில் 4,000-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!