
கோலாலம்பூர், ஏப்ரல்-18, கோலாலம்பூர் மாநகரில் கள்ளக் குடியேறிகள் புழங்குமிடமாக விளங்கி வரும் மேடான் இம்பியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 506 பேர் கூண்டோடு கைதாகினர்.
அவர்களில் 58 பே பெண்களாவர் என, குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சக்காரியா ஷாபான் கூறினார்.
மொத்தமாக 895 பேரிடம் பரிசோதனை நடத்தியத்தில், அந்த 506 பேர் பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காகக் கைதாகினர்.
அவர்களில் பெரும்பாலோர் வங்காளதேசிகள், நேப்பாளிகள், இந்தோனேசியர்கள், இந்திய நாட்டவர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
4 மாடிகளைக் கொண்ட 6 கட்டடத் தொகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
தப்பியோடும் முயற்சியில், ஏராளமான கள்ளக் குடியேறிகள் கூரைகளுக்கு அடியில் ஒளிந்துகொண்டனர்; மேலும் சிலர், கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் போல ஆள்மாறாட்டம் செய்தனர்.
தப்பியோடிய சிலருக்கு காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு சில கள்ளக் குடியேறிகள், அமுலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பங்களும் அரங்கேறின.
எனினும், எதனையும் பொருட்படுத்தாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது