Latestஉலகம்

பாகிஸ்தானின் யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்தது

புதுடில்லி, ஏப் 28 – பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் யூடியூப் சேனல்களை தடை செய்ய இந்தியா பெரிய அளவிலான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. காஷ்மீரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ஆத்திரமூட்டும் உள்ளடக்கத்தைப் பரப்பியதாகக் கூறி,
12க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை இன்று இந்தியா தடை செய்தது.

தடைசெய்யப்பட்ட தளங்களில் பாகிஸ்தான் செய்தி நிறுவனங்களான Dawn, Samaa TV, ARY News, Bol News, Raftar, Geo News and Suno News.ஆகியவற்றின் யூடியூப் சேனல்களும் அடங்கும். தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவு காரணமாக இந்த தளங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.

ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத ரீதியாக உணர்திறன் மிக்க உள்ளடக்கம், தவறான மற்றும் பொய்யான கதைகள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பட்டியலிடப்பட்ட 16 சேனல்கள் தடுக்கப்பட்டதாக அரசாங்க அறிக்கையை மேற்கோள் காட்டி press trust of India செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ஏப்ரல் 22 ஆம் தேதியன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கால் நூற்றாண்டில் சர்ச்சைக்குரிய காஷ்மீர் வட்டாரத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லையென பாகிஸ்தான் மறுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!