Latestமலேசியா

பாலஸ்தீன முற்றுகைக்கான 6 நாள் மறியல் கோலாலம்பூரில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே இன்றிரவு தொடங்குகிறது

கோலாலம்பூர், டிச 26 – பாலஸ்தீன முற்றுகைக்கான 6 நாள் மறியல் கோலாலம்பூரில்ஜாலான் துன் ரசாக்கில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே இன்றிரவு தொடங்குகிறது. சமூகம், இளைஞர்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்களை உள்ளடக்கிய மொத்தம் 48 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் 20,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட காஸாவில் நடந்த போரைப் பற்றி அக்கறை கொண்ட மலேசியர்களின் முன்முயற்சிதான் பாலஸ்தீனத்திற்கான முற்றுகை மறியல் போராட்டம் என பாலஸ்தீன ஒற்றுமை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த மறியல் போராட்டம் காசா மீதான முற்றுகையின் அடையாளமாகும், ஆனால் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை நிறுத்தவும் உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்தவும் தன்னார்வ அமைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுப்பார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியலின்போது கூடாரங்களில் முகாமிட்டு, ஒவ்வொரு இரவும் பாலஸ்தீனர்களுக்கான தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்பதோடு பாலஸ்தீன கொடிகள் மற்றும் அவர்களது போராட்டங்களின் சின்னங்களையும் காட்சிக்கு வைத்திருப்பார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!