
மூவார், மார்ச்-5 – ஜோகூர், மூவாரில் சக நாட்டவரின் வயிற்றில் கத்தியால் குத்தி அவர் கோமாவுக்கு செல்வதற்குக் காரணமான நேப்பாளி ஆடவருக்கு, ஆறாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாவலருமான 33 வயது Anup Raut, மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிபதி அத்தீர்ப்பை வழங்கினார்.
கைதான நாளான கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் சிறைத் தண்டனையை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜனவரி 18-ஆம் தேதி, இரவு 9.40 மணியளவில் மூவார், ஜாலான் அப்துல்லாவில் உள்ள ஓர் உணவகத்தின் பின்னால் அக்குற்றத்தைப் புரிந்ததாக Anup குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
வேலை முடிந்து தங்குமிடத்திற்கு திரும்பும் வழியில், பாதிக்கப்பட்ட நண்பர் தள்ளிவிட்டதால் சினமடைந்த Anup, கத்தியால் அவரைத் தாக்கியுள்ளார்.
இதனால் வயிற்றில் படுகாயமடைந்தவர், 30 நாட்களுக்கு சிகிச்சைப் பெற வேண்டியிருந்தது.