
புத்ராஜெயா, அக்டோபர்-4,
SBP எனப்படும் தங்கும் வசதியுடன் கூடிய பள்ளிகளுக்கு இடையில் நேற்று பேராக், ஈப்போவில் நடைபெற்ற தேசிய அளவிலான எழுவர் ரக்பி போட்டியில் மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
அது குறித்து அதிர்ச்சித் தெரிவித்த கல்வி அமைச்சு, மாணவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
போட்டியின் போது மாணவர் மைதானத்தில் மயங்கி விழுந்து உடனடி மருத்துவ சிகிச்சை பெற்றார்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபின் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, போட்டி இரத்து செய்யப்பட்டதாகவும் பின்னர் புதிய தேதியில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவரின் ஆன்மா இறைவனடி சேர பிராத்திப்பதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு கூறிற்று.