Latestஉலகம்

‘ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு, தொடர்புச் சாதனங்களை வேவுப் பார்ப்பது’; ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக புதிய வழக்கு

கலிஃபோர்னியா, டிசம்பர்-3 – தனது ஊழியர்களின் தனிப்பட்ட தொடர்புச் சாதனங்களையும் iCloud கணக்குகளையும் வேவுப் பார்த்ததாக, ஆப்பிள் நிறுவனம் புதியப் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளது.

அதோடு, சம்பளம் பற்றியும் வேலைச் சூழல் பற்றியும் ஒருவருக்கொருவர் பேச ஆப்பிள் தடை விதித்தாகக் கூறி, வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தில் டிஜிட்டல் விளம்பரப் பிரிவில் பணியாற்றும் Amar Bhakta என்பவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில நீதிமன்றத்தில் அவ்வழக்கைப் பதிவுச் செய்துள்ளார்.

வேலைக்காக ஊழியர்கள் பயன்படுத்தும் தங்களது சொந்த தொடர்புச் சாதனங்களில், மென்பொருளொன்றை பதிவிறக்கம் செய்யுமாறு நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது.

அந்த மென்பொருள் உதவியுடன், ஊழியர்களின் மின்னஞ்சல், புகைப்பட கேலரி, சுகாதார விவரங்கள், விவேகக் கைப்பேசியின் தரவுகள் மற்றும் இதர சுயவிவரங்களை ஆப்பிள் ஊடுருவி வருவதாக அந்நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது வேலைச் சூழல் குறித்து பாட்காஸ் (podcast) பேட்டியில் பேசுவதற்கும் தமக்குத் தடை விதிக்கப்பட்டதாக, 2020 முதல் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்து வரும் Bhakta கூறினார்.

தனது தனிப்பட்ட LinkedIn சமூக ஊடகப் பக்கத்திலிருந்து, நிறுவனத்தின் வேலைச் சூழல் பற்றிய விவரங்களை நீக்குமாறும் ஆப்பிள் அவரை உத்தரவிட்டதாம்.

சட்டவிரோத கண்காணிப்புக் கொள்கை, தகவல் அளிப்போர் பாதுகாப்புச் சட்ட மீறல், போட்டித்தன்மைக்கு தடை விதித்தல், வேலைச் சந்தையில் ஊழியர்கள் சுதந்திரமாக செயல்பட முட்டுக்கட்டையாக இருத்தல், பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதித்தல் என ஆப்பிள் நிறுவனத்தின் மீது அவர் சரமாரியாகப் புகார்களை அடுக்கியுள்ளார்.

இவ்வேளையில், அவ்வழக்குக் குறித்து கருத்துரைத்த ஆப்பிள் நிறுவனத்தின் பேச்சாளர், அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் முகாந்திரம் இல்லாதவை என்றும், சட்டப்படி அதனை அணுகுவோம் என்றும் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!