
டாக்கா, ஜனவரி-2 – வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 31‑ஆம் தேதி, 50 வயது இந்து ஆடவர் கோகன் சந்திர தாஸ் மீது ஒரு கூட்டத்தினர் தாக்குதல் நடத்தினர்.
அவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, பின்னர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக, அருகிலிருந்த குளத்தில் குதித்ததால் அவர் உயிர் தப்பினார்.
ஆனால் தீக்காயங்களால் கடுமையாக காயமடைந்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும்.
இந்த தொடர் வன்முறைகள் சிறுபான்மையினரின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி, மனித உரிமை அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.
தொடரும் வன்முறைகளால், 13.1 மில்லியன் வங்காளதேச இந்துக்கள் உயிர் பயத்தில் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.



