
கோலாலம்பூர், அக்டோபர்-6,
புத்ராஜெயா தேசிய பதிவிலாகாவில் குழந்தைகளின் பிறப்புகளைப் பதிவுச் செய்ய போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக இன்று குற்றம் சாட்டப்பட்ட ஐவர், 3 தனித்தனி செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
40 வயது Wong Liang Fong, 49 வயது Tey Tian Teck, 46 வயது Er Cheow Chin மூவருக்கும் தலா 14,000 ரிங்கிட் அபராதமும், 44 வயது Yong Chin Wee, 28 வயது Chong Yi Lin இருவருக்கும் தலா 14,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும், ஆறாவது நபரான 54 வயது Chee Keng Tiong, தம் மீதான 2 குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரினார்.
இக்கும்பல் போலி பிறப்புப் பதிவு ஆவணங்கள் மற்றும் இரு மருத்துவர்களின் கையொப்பம், முத்திரை கொண்ட ஆவணங்கள் மூலம் குழந்தைகளின் பிறப்புகளை வேறு பெண்களின் பெயர்களில் பதிவுச் செய்தது விசாரணையில் அம்பலமானது
இக்குற்றங்கள் 2022 ஜூன் முதல் 2023 மே வரை நிகழ்ந்துள்ளன.



