
ஜாசின், ஜூலை-15- இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பப்பட்டதாக நம்பப்படும் 227 கிலோ கிராம் எடைகொண்ட வெடிகுண்டு, மலாக்கா, ஜாசினில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Felda Bukit Senggeh-வில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் நேற்று மதியம் துப்புரப் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டக்காரர், அதனைக் கண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து வெடிகுண்டு ஒழிப்பு நிபுணர்கள் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில், அந்த பழைய வகை UXO வெடிகுண்டு இன்னும் தீவிரம் குறையாமல் இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
இந்நிலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைப்படி இன்று அவ்வெடிகுண்டு அழிக்கப்படும் என ஜாசின் போலீஸ் கூறியது.